உலகிலுள்ள உயிரினங்களை ஆண்டுகொள்ள மனிதன் உலகில் சிருஷ்டிக்கப்பட்டான். ஆகவே அவற்றிற்கு பெயரிடும் பொறுப்பினை முதல் மனிதன் பெற்றுக் கொண்டான். பூமியை பாதுகாப்பதுமான பெரிதான வேலை அவனுக்கு கொடுக்கப்பட்டது.
அவனுடைய வேலையை குறித்து அவனோடு பேசுவதற்காக தேவன் தோட்டத்தில் உலாவும் மாலை நேரம் மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பான்.
ஆனால் அந்த மனிதன் தான் தனிமையாக இருப்பதாகவும், தான் ஆண்டுகொள்ளும் மிருகங்கள் துணைகளுடன் இருப்பதாகவும் கண்டதினால் சில கவலைகள் அவனுக்கு பிடித்திருக்கக் கூடும்.
தனிமையாக மனிதன் இருப்பதை குறித்து கடவுள் சிந்தித்திருக்கக் கூடும். ஆகவே மனிதன் தனிமையாக இருப்பது நல்லதா என கடவுள் அவனிடம் கூட கேட்டு தெரிந்து கொண்டிருக்கக் கூடும்.
மனிதன் எப்போதும் கடவுளை விட தனக்கேற்ற துணையை காண்பதில் தான் மகிழ்ச்சி கொள்வான் என்பதை கடவுள் அறிந்தி விட்டார் போலும், ஆகவே தான் மேலும் காத்திருக்காமல் ஒரு வேலை செய்யும் நோக்கோடு முதல் மனிதனிடம் வருகின்றார்.
முதல் வேலையாக மனிதனுக்கு ஏற்ற துணையை உருவாக்கும் பணியை மேற்கொள்ளத் தொடங்கினார். தமது சாயலாக மனிதனுக்கு ஒரு துணையை உருவாக்கிக் கொடுப்பது தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்திருந்தது.
ஆக மனிதனுக்கு துணையை உருவாக்கி கொடுத்து முதல் திருமணத்தை உலகில் நடத்தி வைத்த தேவன் தொடர்ந்தும் அக்காரியத்தை மனித சமுதாயத்தில் செய்து வருகின்றார். ஆகவே தான் அதற்கு குழந்தைகள் தேவனுடைய ஈவாக தரப்படுகின்றன.
கடவுள் மனிதன் முழுமையடையும் படி உருவாக்கிய திருமணம் எப்போதும் தேவனுடைய பார்வையில் ஆசீர்வாதம் தருவதாக அமைந்து வருகின்றது.
No comments:
Post a Comment