பல உலக தேவைகளுக்காகவும் மனிதர்களை நோக்கி செல்லத் தொடங்குகின்றோம். ஏனெனில் எமது உலகப் பிரகாரமான தேவைகள் இன்னொரு மனிதனின் உதவியிலேயே தங்கியுள்ளது.
காணப்படுகின்ற தேவைகள் காணப்படுகின்றவர்களாலேயே கிடைக்கும் என நம்புகின்றதனால் தான் காணப்படும் உருவங்களை உருவாக்க மனது துடிக்கிறது.
கண்களால் காணும் உருவங்கள் நமக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கில் அவைகள் மனிதர்களால் உருவாக்கம் அடைகின்றன.
ஆனால் உலக தேவைகளை அடைய காணப்படாத ஒருவரை அழைக்கலாம் என்றால் நம்ப மறுப்போர் அநேகர்.
எமது தேவைகளை இறைவன் சந்திப்பார் என்பதை நம்பாதோரே உலகில் அதிகமாய் உள்ளனர். ஏனெனில் அவர்கள் இறைவனை கண்களால் காணவில்லை.
காணப்படாத இறைவன் எப்படி எமது வாழ்நாளுக்குரிய அடிப்படை தேவைகளை சந்திப்பார்?
எனினும் நம்ப வேண்டிய இறைவனை விட்டுவிட்டு எமது கண்களால் உருவாக்கும் எந்த சிலையும் எதையும் தரப்போவதில்லை.
காணப்படாத இறைவன் எதிர்காலத்தில் உங்கள் முன் தோன்றி தனது உருவத்திலல்லாத மனிதன் உருவாக்கிய சிலைகளை குறித்து உன்னிடம் கேள்வி கேட்டால் என்ன செய்வாய்?
இறைவன் தனது உருவத்திலில்லாத சிலைகளை கண்டு இன்றும் வெறுத்து தள்ளுகிறார்.
இறைவனுக்கு ஒத்த சாயலே இல்லாத ஒன்றை மண்ணால் உருவாக்கும் முட்டாள் மனிதனாக இனியும் வாழாதே..
காணப்படாத இறைவனை இன்றே வழிபடு.. சத்தியத்தை தேடினால் அவரே வெளிப்படுவார்.. இறைவேதத்தில் அவரை அறி.. எதிர்காலத்தில் அவரை பயமின்றி சந்திக்கலாம்.
No comments:
Post a Comment