www.Tamil.bid
click

Wednesday, April 25, 2018

நீங்கத்தக்க கொடுமைகள்

பல்வேறு இன்னல்கள் வாழ்வில் எழுவது இயல்பு. அவைகள் வாழ்வின் எழுச்சிக்கு துணை புரிகின்றன.

மீட்சிக்கு வழி தேடும் முயற்சிகளும் உருவாக்கம் பெறுகின்ற இக்கட்டுக்கள் அதிகமாக இக்காலத்தில் எங்கும் தென்படுகின்றன.

கொடுமைகளால் நிறைந்தோரால் பல்வேறு தீமையான நிகழ்வுகள் தினமும் அரங்கேறி மனித பாசத்தை விழுங்கி நிற்கின்றன.

பரிதாபமான முகங்களோடு கயவர்களின் முன்னிலையில் நிற்பதும் நரக வாழ்வினை காட்டும் மனித சோகங்களாக படம் பிடிக்கப்படுகின்றன.

எனினும் பாடுபடுவோர் பாக்கியவான்கள் என்பது இறைவன் எழுதிய தீர்ப்பு.

தீய குணங்களால் தம் ஆத்துமாக்களை மகிழ்விப்போர் இறுதியில் இறைவனுக்கு எதிராக எழுந்ததினால் ஆத்துமத்தை, சதாகால வாழ்விடத்தை இழப்பர் என்பதுவே உறுதி.

என்ன சோகங்கள் நிகழ்ந்தாலும் இறைவனின் இருப்பிடத்தில் நிச்சயம் மகிழ்ச்சியுண்டு.

சக மனிதனால் கிடைத்த அவமானத்திற்கு தக்க பதில் இறைவனிடம் உண்டு.

கைவிடாத இறைவன் இருக்கையில் கலங்குவதற்கு ஏன் இடம்?

மரித்தாலும் இறைவனின் இராஜ்யத்தையும் சிங்காசனத்தையும் கண்ட ஸ்தோவான் போன்றோரின் வரலாறுகளால் எழுதப்பட்டது பரிசுத்த வேதாகமம். அவற்றை பின்பற்றுவோரும் அவ்விடம் செல்வர்.

ஆகவே நீங்கிவிடும் உபத்திரவத்தில் நித்தியத்தை இழந்திடாமல் தாங்கிக் கொள்ளும் தயவை ஈந்திட இறைவனே முன்வாரும். எம் துயர் தீரும் இறைவா. மரணத்தின் பின்னும் உம்மோடு வாழும் வாழ்வைத் தாரும் இறைவா.


No comments:

Fb

twitter